ஆளப்போறான் தமிழன் சாதனையை முறியடிக்காத சிம்டங்காரன்?? நோ கமெண்ட்ஸ் ரசிகர்கள்.. காரணம் என்ன ??

0
152
Simtaangaran

தளபதி விஜய் தான் தற்போதைய இதய துடிப்பு!! இணையதளங்களில் இவர் பெயர் இல்லாமல் தமிழ் சினிமா இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்த ஆன்லைன் சூப்பர்ஸ்டார். ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து கவனமாக படங்கள் கொடுக்கும் ஒரு பக்கா என்டர்ட்ரைனர். இணையங்களிலும் பலர் இதயங்களிலும் பல ரெக்கார்டுகளுக்கு சொந்தக்காரர்.

இவரின் சமீபத்திய சர்க்கார் பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியான தினம் பல ரெக்கார்டுகளை பெற்றது அதே ரஹ்மான்- விவேக் கூட்டணியில் விஜய் இணையும் இந்த படத்திற்கான பாட்டும் பட்டி தொட்டி எல்லாம் பற்ற வைக்கும் எண்ணத்தில் ரசிகர்கள் இருக்கின்றாரனார். இருப்பினும் ஆளப்போறான் தமிழன் பாடல் அளவிற்கு வரவேற்பும் Youtube- இல் வியூஸ் ம் வராததற்கு காரணம் என்ன?? ஒரு அலசல் :

   • ஆளப்போறான் தமிழன் பாடலை Youtube -இல் வெளியிட்டது சோனி நிறுவனம். ஏற்கனவே இந்நிறுவனத்திற்கு 16 மில்லியன் Subscribers இருக்கின்றனர். அது போக இந்தியாவையும் தாண்டி பல Subscribers-ஐ கொண்டுள்ள நிறுவனம். எனவே அப்பேர்ப்பட்ட நிறுவனம் விடியோவை ஷேர் செய்தால் உடனே பலரும் பார்க்க மிகப்பெரிய சாதனை செய்யப்பட்டது. இதுவே சிம்ட்டான்காரன் பாடலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் சன் பிக்ச்சர்ஸ் வெறும் 1.6 Million Subscribers  கொண்டுள்ளது. இது சோனி நிறுவனத்தின் 10% மட்டுமே எனவே தான் 24 மணி நேரத்தில் மட்டுமே வாங்க முடிந்தது.
   • விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு பத்து ஆண்டுகளுக்கு ஆளப்போறான் தமிழனே தேசிய கீதமாக இருக்கும் அப்படி ஒரு பாட்டை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த பாடல் சற்று ஏமாற்றத்தையே கொடுத்திருந்தாலும் இதை விஜய் அவரின் சொந்த குரலில் பாடினால் நிச்சயம் “World முழுதும் அர்ல விடும்” என்பதில் சந்தேகம் இல்லை. புரிந்துகொள்வார்களா படக்குழு??
   • இன்னொரு மிகப்பெரிய ஏமாற்றம் பாடல் வரிகள் புதுமையாக எழுதிய முயற்சி வரவேற்கத்தக்கது ஆனால் ஆளப்போறான் தமிழன் பாடல் தெள்ள தெளிவான தமிழில் இருந்தது மிக பெரிய பிளஸ் அதுவே இந்த பாடலுக்கான மைனஸ்.யாருக்குமே புரியாத வார்த்தைகளை போட்டு ரசிகர்களையே கொஞ்சம் தடுமாற வைத்தது Simtaangaran.
   • “பல்டி பக்கர டர்ல வுடணும் பல்த்து” என்று தொடங்கும் போதே ரசிகனின் முகத்தில் ஒரு வித பீதி கிளம்புவது தவிர்க்க முடியாத ஒன்று. கானாவாக ஆரம்பித்து அப்படியே கிடாருடன் பயணித்து இடையில் புல்லாங்குழல் இசையில் தாலாட்டி மெலோடியில் ஆரம்பித்து பின் காணவுக்கே திரும்புவது எல்லாம் அல்டிமேட் Fusion! ஆனால் விஜய் ரசிகர்களுக்கு “Sorry, No comments!”


  ஆனால் இதை எல்லாம் தவிர்த்து நிச்சயமாக ஒரு பரிசோதனை முயற்சியாக வித்யாசமான வரிகள் இசையோடு எனர்ஜி தரும் இந்த பாடல் நிச்சயம் திரையில் தளபதி நடனத்தோடு கலக்கல் விருந்து படைக்கபோவது உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here